ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 6, 2022 அன்று, ரூபேஷ் பாண்டே என்ற ஹிந்து மைனர் சிறுவன் தனது மாமாவுடன் சரஸ்வதி பூஜை ஊர்வலத்தைக் காணச் சென்றிருந்தான். பூஜை நடக்கும் இடத்தின் அருகே இருந்த எம்.டி. அஸ்லாம் அன்சாரி என்ற முஸ்லிம் நபர் தலைமையிலான ஒரு கும்பல் ரூபேஷ் பாண்டேவை அங்கிருந்து கடத்திச்சென்று கொடூரமாக அடித்துக்கொன்றனர். இந்த வழக்கில் இன்று வரை ஐந்து பேர் மீது மட்டுமே அம்மாநில அரசு குற்றம்சாட்டி கைது செய்துள்ளது. இதில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளை இதுவரை கைது செய்யவில்லை. இச்சம்பவம் குறித்த நீதிமன்ற விசாரணையின்போது, நீதிபதிகள் இதனை சுட்டிக்காட்டி கடிந்துகொண்டனர். “காவல்துறை சுதந்திரமாக இந்த விஷயத்தை விசாரிக்கவில்லை என்பதுடன் சில நபர்களின் தூண்டுதலும் செல்வாக்கு செலுத்தப்படுவதும் முதல் பார்வையிலேயே தெரிகிறது. காவல்துறை எதையோ மறைக்கிறது” என கூறி கடுமையாக காவல்துறையை கண்டித்த நீதிமன்றம், இவ்வழக்கை சி.பி.ஐக்கு மாற்றி உத்தரவிட்டது. ஒரு குறிப்பிட்ட வழக்கை சி.பி.ஐ போன்ற சிறப்பு விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற முடிவுக்கு நீதிமன்றங்கள் வந்தால், அதற்கான அதிகாரம் அவர்களுக்கு உள்ளது. இருப்பினும், விதிவிலக்கான சூழ்நிலையில் மட்டுமே அத்தகைய அதிகாரம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.