மத்திய அரசு, ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி, அரசு வேலைவாய்ப்பில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்குகிறது. இந்த இடஒதுக்கீட்டு பட்டியலில் திருநங்கையரை சேர்ப்பதால் அவர்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்புகள் கிடைக்கும், சமூக அந்தஸ்துடன் வாழ்க்கையில் முன்னேற முடியும் என மத்திய அரசு கருதியது. இதனையடுத்து மத்திய சமூக நலத்துறை அமைச்சகம், இதுதொடர்பாக பல்வேறு அமைச்சகங்கள், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துடன் விவாதங்கள் நடத்தியது. எந்த ஆட்சேபனைகளும் இல்லாத்தால் திருநங்கையரை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்கும் மசோதாவை சமூக நலத்துறை, மத்திய அமைச்சரவைக்கு அனுப்பியது. அமைச்சரவையின் ஒப்புதலுக்கு பிறகு இதற்கான சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் சட்டமாக்கப்படும்.