புதிய அமைச்சரவை

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில், தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன், ஜோதிராதித்யா சிந்தியா, சர்பானந்தா சோனாவால், கிரண் ரிஜ்ஜூ, நாராயன் ரானே உள்ளிட்ட 43 பேர் அமைச்சர்களாக பதிவியேற்றுக் கொண்டனர். மேலும், கூட்டுறவுத் துறைக்கென, ‘சஹ்கர் சே சமிர்தி’ (ஒத்துழைப்பிலிருந்து செழிப்பு) என்ற கொள்கை பார்வையுடன் தனி அமைச்சகத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.