கர்நாடகாவில், முஸ்லிம்களால் மதக்கலவரங்கள் அதிகம் நடத்தப்படும் இடம் தக்ஷின கன்னட மாவட்டம். கேரளாவின் பாலக்காட்டில் இருந்து, 30 ஆண்டுகளுக்கு முன், இந்த தக்ஷின கன்னட மாவட்டத்தில், முல்கியை அடுத்த கவதாரு கிராமத்தில் குடியேறியவர் காசிம் என்ற முஸ்லிம் நபர். இவருக்கு 19 ஆண்டுகளுக்கு முன் ஒரு பிரச்சனை வந்தபோது, ஒரு ஞானியின் அறிவுரைப்படி, துளு மக்கள் அதிகம் வழிபடும் தெய்வமான கோரகஜ்ஜாவிக்கு கோயில் கட்டியுள்ளார். இது இன்னல்களில் இருந்து தங்களை மீட்பதற்காக, துளு மக்கள் வழிபடும் தெய்வம். இவர் கட்டிய கோவிலுக்கு, தினமும் மத வேறுபாடின்றி, 50க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். கோயில் கட்டத் துவங்கிய நாள் முதல், காசிம் சைவத்துக்கு மாறிவிட்டார். இந்த கோயிலில்தான் மூன்று முஸ்லிம்கள் சிறுநீர் கழித்தும் உண்டியலில் ஆணுறைகள் போட்டும் சென்றனர். அதில் ஒருவர் சில நாட்களில் பைத்தியம் பிடித்து, ரத்த வாந்தி பேதி எடுத்து, தலையை சுவரில் முட்டிக்கொண்டு இறந்தார், மற்ற இருவருக்கும் அதே போன்ற அறிகுறிகள் வந்ததால், இக்கோயிலில் மன்னிப்பு கேட்டு காவல்துறையில் சரணடைந்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது.