தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் மனு கொடுக்க வந்த பெண்ணிடம் அந்த மனுவை வாங்கி அவரது தலையில் அடிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. அமைச்சரின் இந்த செயலுக்கு தமிழகமெங்கும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் 48 மணி நேரத்தில் பதவி விலக வேண்டும் அல்லது அவரது வீட்டை தமிழக பா.ஜ.க முற்றுகையிடும் என்று தெரிவித்துள்ளார்.