கேரளா, செர்த்தலாவில் உள்ள என்.எஸ்.எஸ் கல்லூரியின் மாணவர் சங்கத் தலைவர், ஏ.பி.வி.பி தலைவருமான ஜே ஆனந்த், அக்கல்லூரியில் பயின்ற சீனியர்களுக்கான பிரியாவிடை நிகழ்ச்சியில் பங்கேற்க கல்லூரி வளாகத்திற்குள் சென்றுகொண்டிருந்தபோது, கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான (எஸ்.எப்.ஐ) ஸ்டூடண்ட் பெடரேஷன் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த குண்டர்கள் அவரை இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் ஏ.பி.வி.பி ஆர்வலர் அனு என்பவரும் காயமடைந்தார். இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல, ஒரு மாதத்திற்கு முன்பு கேரள வர்மா கல்லூரியில், சி.ஏ.ஏவை ஆதரித்து பேசிய ஏ.பி.வி.பி மாணவர்களையும் இந்த எஸ்.எப்.ஐ ரௌடிகள் கொடூரமாக தாக்கியுள்ளனர். மேலும், கடந்த ஆண்டு கோட்டயம், வஜூரில் உள்ள என்.எஸ்.எஸ் கல்லூரியில் நடந்த மற்றொரு சம்பவத்தில், எஸ்.எப்.ஐ குண்டர்கள் ஏ.பி.வி.பி தொழிலாளர்களை கூர்மையான ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.