‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற திரைப்படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு, அதே பாணியில் கேரளாவில் காணாமல் போன ஆயிரக்கணக்கான ஹிந்து, கிறிஸ்தவ மதங்களை சேர்ந்த இளம்பெண்கள் குறித்த கதையைச் சொல்லத் தயாராகிவிட்டனர் திரைப்படத் தயாரிப்பாளர்கள். ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற அந்த திரைப்படம் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் போர் மண்டலங்களுக்கு கடந்த 2009ம் ஆண்டு முதல் கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான இளம்பெண்களின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ‘கேரளாவில், ஆயிரக்கணக்கான இளம்பெண்கள் காணாமல் போயுள்ளனர், கடந்த 12 ஆண்டுகளாக அவர்கள் வீடு திரும்பவில்லை’ என்ற வாக்கியத்துடன் அந்த திரைப்படத்தின் டிரெய்லர் தொடங்குகிறது. பிறகு, தடை செய்யப்பட்ட அமைப்பான என்.டி.எப்பின் நிகழ்ச்சி நிரலைப் போலவே கேரளாவையும் முஸ்லீம் மாநிலமாக்க பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா முயற்சிக்கிறது, 20 ஆண்டுகளில் கேரளாவை முஸ்லிம் மாநிலமாக்குவது அவர்களின் திட்டம் என்ற கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அ ச்சுதானந்தனின் உரை அதில் இடம் பெற்றுள்ளது. “கடந்த 2009ம் ஆண்டு முதல், கேரளா மற்றும் மங்களூருவைச் சேர்ந்த இந்து மற்றும் கிறிஸ்தவ குடும்பங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 32,000 சிறுமிகள் அந்த சிறுமிகள், இளம் பெண்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக முஸ்லிம் மதத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் சிரியா, ஆப்கானிஸ்தான் அல்லது பிற பகுதிகளில் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் செல்வாக்கு பெற்ற குழுக்களால் நடத்தப்படும் இத்தகைய மிகப்பெரிய சர்வதேச சதிகளுக்கு எதிராக எந்தவொரு உறுதியான செயல் திட்டத்தையும் அரசாங்கங்கள் சிந்திக்கவில்லை” என்று திரைப்பட இயக்குனர் சுதிப்தோ சென் கூறியுள்ளார். “மனித சோகம், உங்களை மையமாக உலுக்கும் ஒரு கதை” என்று திரைப்படத் தயாரிப்பாளர் விபுல் அம்ருத்லால் ஷா தெரிவித்துள்ளார்.