சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்குர் முஸ்லிம்களை சீன அதிகாரிகள் மோசமாக நடத்துவதையும் அங்குள்ள முஸ்லிம் பெண்களை பாலியல் பலாத்காரம் மற்றும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதையும் பி.பி.சி செய்தியாக வெளியிட்டிருந்தது. இதனால் தங்களை குறித்து விமர்சிக்கும் செய்திகளை வெளியிட்ட பி.பி.சி உலக செய்திகளை கடந்த மாதம் சீனா தடை செய்தது. இந்நிலையில், அந்த பி.பி.சி செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளரான ஜான் சுட்வொர்த் ஒன்பது ஆண்டுகளாக பெய்ஜிங்கில் வசித்து வருகிறார். இவரது மனைவி யுவோன் முர்ரே, ஐரிஷ் செய்தி நிறுவனமான ஆர்.டி.இ-யின் சீனாவிற்கான நிருபராக உள்ளார். இவர்களை சட்டவிரோதமாக சீன காவல்துறையினர் பின்தொடர்ந்துள்ளனர். இதனால் சுட்வொர்த் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அவரை உடனடியக தைவானுக்கு பி.பி.சி நிறுவனம் அனுப்பிவிட்டது.