தெலுங்கானா அரசின் பிரதான திட்டங்களில் ஒன்றாக, ஏழைகளுக்கு இரட்டை படுக்கையறை கொண்ட வீடு வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, கட்டுமானப் பணி நிறைவுப் பெற்று வீடுகளை பயனாளர்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி சிர்சிலாவில் நடைபெற்றது. இதில் பங்கேற்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வந்திருந்தார். ரிப்பனை வெட்டுவதற்கான கத்திரிகோல் வழங்குவதற்கு அதிகாரிகள் மறந்து விட்டனர். அதை எடுத்து வருவதற்கும் சற்று தாமதமானது. இதனால், பொறுமை இழந்த முதல்வர் சந்திரசேகரராவ், ரிப்பனை வெறும் கைகளால் கிழித்து விட்டு புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்குள் சென்றார். சிறிது நேரம் கார்த்திருக்கக்கூட பொறுமை இல்லாத முதல்வரின் இந்த செயல், அப்பகுதி மக்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.