பாரதத்தின் முதல் அம்ரித் சரோவர்

பிரதமர் மோடி, “மன் கி பாத்” நிகழ்ச்சியில், “அமிர்த சரோவர்” தீர்மானத்தை அறிவித்த பிறகு, பல இடங்களில் அதற்கான பணிகள் துரித வேகத்தில் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் “மன் கி பாத்” நிகழ்ச்சியில், உ.பி.யில் உள்ள ராம்பூர் கிராம பஞ்சாயத்து பட்வாய் பகுதியில் அமைந்துள்ள அமிர்த சரோவர்  நீர்நிலை பற்றி பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார். பட்வாய் கிராம சபை நிலத்தில் ஒரு குளம் இருந்தது. ஆனால் அது பராமரிக்கப்படாமல் அசுத்தமாக இருந்தது. இதனை உள்ளூர் மக்கள், பள்ளி மாணவர்களின் உதவியோடு சுத்தப்படுத்தி செம்மைப்படுத்தியது கிராம நிர்வாகம் என தெரிவித்தார். மோடியின் அமிர்த சரோவர் நீர் நிலை பாதுகாப்போம் என்ற முன்மொழிவினையொட்டி,  சீர்திருத்தி அமைக்கப்பட்ட பாரதத்தின் முதல் “அம்ரித் சரோவர்” நீ நிலையை, மத்திய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி மற்றும் உத்தரப் பிரதேச ஜல் சக்தி அமைச்சர் ஸ்வதந்த்ரா தேவ் சிங் ஆகியோரால் இந்த குளம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் உத்வேகம் மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வழிகாட்டுதலின் கீழ் இந்த அற்புதமான “அம்ரித் சரோவர்” கட்டப்பட்டுள்ளது என்று நக்வி கூறினார்.