உலக சுகாதார அமைப்பின் தவறு

ஐக்கிய நாடுகளின் சுகாதார பிரிவான உலக சுகாதார நிறுவனம், அதன் இணையதளத்தில் கொரோனா தொடர்பான தரவுகளின் அதிகாரப்பூர்வ உலக வரைபடத்தில்  வெளியிட்டுள்ள பாரத வரைபடத்தில் லடாக், ஜம்மு, காஷ்மீர் பகுதிகள் வெவ்வேறு வண்ணங்களில் காட்டப்பட்டு உள்ளது. மேலும், காஷ்மீர் பிராந்தியத்தில் பாகிஸ்தானின் கொரோனா தகவல்கள் காட்டப்படுகின்றன. அருணாச்சலப் பிரதேசத்தின் வடக்குப் பகுதி சீனாவாகக் காட்டப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. பாரத வரைபடத்தில் இருந்து ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதிகள் துண்டித்து காட்டப்படுவது இது முதல் முறையல்ல. 2020 அக்டோபர், மர்றும் 2021 தொடக்கத்தில், கொரோனா குறித்த அறிக்கை வெளியிட்ட ​​பி.பி.சி தொலைக்காட்சியும் இந்த தவறை செய்தது. கடும் ஆட்சேபணைக்குப் பிறகு இது மாற்றப்பட்டது. ஜூன் 2021ல், டுவிட்டர் இணையதளம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் தனி நாடுகளாகக் காட்டும் ஒரு சிதைந்த வரைபடத்தைக் காட்டியது. டுவிட்டரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து வரைபடம் திரும்பப் பெறப்பட்டது.