ஓம் டாக்கிஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் விஜயமுருகன், இயக்கத்தில் உருவாகிறது ‘ஜகா’ திரைப்படம். சிவபெருமானுக்கு முகக்கவசம், ஆக்சிஜன் சிலிண்டர் அணிவித்து இப்பட போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள், ஹிந்து இயக்கங்கள் என பல தரப்பில் இருந்தும் கண்டன தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பட இயக்குனர் விஜயமுருகன், மன்னிப்பு கேட்டுள்ளார். அவரது அறிக்கையில், ‘ஜகா பர்ஸ்ட் லுக் போஸ்டர் பலரின் விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறக்கூடாது என கடவுளே சொல்வது போன்றுதான் அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டது. படத்தில் எந்த இடத்திலும் கடவுள் அவமதிக்கப்படவில்லை. பலரின் மனது புண்பட்டததை அறிந்து வருந்துகிறேன், அதற்காக மன்னிப்பு கோருவதோடு கொரோனா இல்லாத உலகம் அமைய கடவுளை வேண்டுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.