மும்பைக்கு அருகில் உள்ள வங்கணி ரயில் நிலையத்தில், பார்வையற்ற பெண் ஒருவர் தனது சிறுவயது மகனுடன் நிலைய நடைபாதையில் சென்று கொண்டிருந்த போது அவருடைய பிடியிலிருந்து ஓடிய சிறுவன் நடைப்பாதையில் இருந்து தவறி தண்டவாளத்தில் விழுந்துவிட்டான். அங்கிருந்த பயணிகள் சிலர் விரைவு ரயில் வருவதைப் பார்த்து என்ன செய்வதென்று அறியாது திகைத்து நின்று கொண்டிருந்தபோது அங்கு தண்டவாளத்தில் பாயிண்ட்மேன் ஆக வேலை செய்துவரும் மயூர் ஷெல்கே மிக வேகமாக பாய்ந்து சென்று அந்த சிறுவனைக் காப்பாற்றி தானும் உயிர் தப்பினார். இவரை ரயில்வேதுறை அமைச்சர் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர். வாருங்கள், தன் உயிரைப் பணயம் வைத்து ஒரு குழந்தையைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியர் ‘மயூர் ஷெல்கே’வை நாமும் பாராட்டுவோம்.