ஜார்ஜ் பொன்னையா வழக்கு

ஹிந்து கடவுள்கள், பிரதமர் மோடி, அமெத்ஷாவை விமர்சித்த வழக்கை ரத்து செய்யக் கோரி, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘பூமா தேவி மற்றும் பாரத மாதாவை கேலி செய்துள்ளார், தவறாக சித்தரித்துள்ளார். ஹிந்து சமூகத்தை இழிவுபடுத்துகிறார். ஹிந்து பாரம்பரிய நடைமுறைகளை கேலி செய்கிறார். ஜாதி, மத, இன, மொழி சம்பந்தமாக விரோத உணர்ச்சியை துாண்டுதல், மத உணர்வு, நம்பிக்கையை அவமதித்தல், இரு வகுப்பினரிடையே பகை உணர்வை துாண்டுதல் பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதிந்ததற்கு முகாந்திரம் உள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகளில், அரசு வாயை மூடி, பார்வையாளராக இருக்க முடியாது. பொது ஒழுங்கை நிலைநாட்ட மத அமைதி சீர்குலைக்க முயல்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கையை எடுக்க வேண்டும்’ என கூறினார். ‘கிறிஸ்துவத்திற்கு விரோதமான செயலை செய்ததற்காக, கடவுள் அவரை கண்டிப்பார்’ என்ற கருத்தையும் பதிவு செய்தார். ஜார்ஜ் பொன்னையா மீதான சட்டவிரோதமாக கூடியது, தொற்றுநோயை பரப்பும் வகையில் செயல்பட்டது, மிரட்டல் பிரிவுகளில் பதிந்த வழக்குகளை மட்டும் ரத்து செய்தார்.