அக்டோபர் 1946ல், கேரளாவில் உள்ள புன்னபிரா மற்றும் வயலாரை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் திருவிதாங்கூர் சுதேச அரசின் படைகளால் படுகொலை செய்யப்பட்டனர். இதில் சம்பந்தமே இல்லாத இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியினர், இதை திருவிதாங்கூர் ராஜ்ஜியத்திற்கு எதிரான ஒரு ‘கம்யூனிச எழுச்சி’ என்று பேசி இதில் தங்களை இணைத்துக்கொண்டனர். ஆனால் இதில் எள் அளவும் உண்மையில்லை. இந்நிலையில், கேரளா, ஆலப்புழாவின் சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் சந்தீப் வச்சஸ்பதி, வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு புன்னாபிர, வயலார் நினைவிடத்திற்கு சென்று தியாகிகளுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். தங்களுக்கு மட்டுமே சொந்தம் என இதனை காட்டிக்கொண்டு அரசியல் செய்து வந்த கம்யூனிஸ்ட்டுகள், இதனால் தங்கள் குட்டு வெளிப்பட்டுவிட்டதே என புலம்பி வருகின்றனர்.