கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நாடுகளும் பள்ளிகளை மூடியுள்ள நிலையில், ஸ்பெயினில் உள்ள பெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் டிலா ஃபியூண்டே பள்ளி அதனை சற்று வித்தியாசமாக சிந்தித்து, தனது பள்ளி வகுப்பறைகளை கடற்கரைக்கு மாற்றியுள்ளது. கடந்த ஓர் ஆண்டாக ஆன்லைனில் பாடம் படித்து வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் மாணவர்களை கடற்கரைக்கு வரவழைத்து சமூக இடைவெளியுடன் பாடம் நடத்தி வருகிறது அப்பள்ளி. 3 முதல் 12 வரையிலான மாணவர்கள் கடற்கரையில் தூய்மையான காற்றை சுவாசித்தபடி, ஆர்வமுடன் கல்வி பயில்கின்றனர்.