வேளாண் பட்ஜெட்டால் பயனில்லை

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி, ‘தமிழக அரசு இரண்டாவது முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. ஆனால், அதில் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யும் அறிவிப்பு இல்லை. கரும்புக்கு, 4 ஆயிரம், நெல்லுக்கு, 2,500 ரூபாய் வழங்கப்படவில்லை. விவசாயிகளுக்கு தரவேண்டிய நிலுவை பணம் குறித்தும் அறிவிப்பு இல்லை. விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பது மட்டுமே விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வாக அமையும். தமிழக அரசின் வேளாண் கொள்கையில் மாற்றம் தேவை. உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் சேர்த்து குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்படும். அது இல்லாத தனி வேளாண் பட்ஜெட்டுகளால் விவசாயிகளுக்கு எவ்வித பயனும் இருக்காது’ என்று கூறினார்.