தஸ்னா தேவி கோயிலின் தலைமை பூஜாரியான யதி நரசிங்கானந்த் சரஸ்வதியின் தலையை துண்டிக்க வேண்டும் என்று மசூதிகளில், முஸ்லிம் மதவாத அரசியல் கட்சிகள், பல முஸ்லிம் அடிப்படைவாத தலைவர்களும் வெளிப்படையாக பேசிவருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அவரது தலையை துண்டிக்க வேண்டும் என பல இடங்களில் பெரிய சுவரொட்டிகளும் போஸ்டர்களும் வைக்கப்பட்டுள்ளன. ஒவைசியின் கட்சியான ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் கான்பூர் அலுவலகத்தில்கூட இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. யதி நரசிங்கானந்த், நபியை விமர்சித்தார் என கூறி அவரது தலை துண்டிக்கப்பட வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் எம்.எல்.ஏ.முமான அமானத்துல்லா கான் டிவிட் செய்துள்ளார். மேலும், பயங்கரவாதத்தை பரப்பும் விதத்தில் குர்ஆனிலிருக்கும் 26 வசனங்களை நீக்குமாறு உச்சநீதிமன்றத்தில் மனு அளித்த உத்தரபிரதேச முன்னாள் வக்பு வாரியத்தலைவர் சையத் வாசிம் ரிஸ்வியின் தலையை கொய்ய வேண்டும் என்றும் இந்த போஸ்டர்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. முன்னதாக, மத நல்லிணக்கத்தை சீர்குலைத்தார் என டில்லி காவல்துறை ஏற்கனவே சுவாமி யதி நரசிங்கானந்த் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது என்பதும் ரிஸ்வியின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து அவருக்கு ரூ. 50,000 அபராதம் விதித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விஷயத்தில், பயங்கரவாதத்தை தூண்டும் விதமாக, தலையை துண்டிக்க பகிரங்கமாக அழைப்பு விடுத்த கட்சிகள், தலைவர்களை மற்ற கட்சியினர் கண்டனம் செய்யாதது, அவர்கள் மீது சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்காதது போன்றவை பொதுமக்களிடம் அதிருப்தியை வளர்த்துள்ளது.