பிரான்சில் சில நாட்களுக்கு முன் ஒரு பெண் காவல் அதிகாரியை, துனிசியாவை சேர்ந்த ஜமீல் கோர்ச்சேன் என்ற 36 வயதான முஸ்லிம் பயங்கரவாதி கழுத்தை அறுத்து கொலை செய்தான். அப்போது அவன் “அல்லாஹு அக்பர்” என்று கத்தினான். பின்னர் ஒரு மற்றொரு காவல் அதிகாரியால் அவன் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த பயங்கரவாதியின் தந்தை, தனது மகன் ‘இஸ்லாத்தின் கடுமையான நடைமுறைகளை’ கடைப்பிடித்து வந்தான். இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து அவனிடம் சில நடவடிக்கை மாற்றங்கள் தென்பட்டன. அவன் சில ஆளுமைக் கோளாறுகளால் அவதிப்பட்டான். இந்த கொலையை செய்வதற்கு முன், பல ஜிஹாதி வீடியோக்களை பார்த்தான்’ என்று தெரிவித்துள்ளார். ‘ஜமீல் கோர்ச்சேன் பிரான்சில் சட்டவிரோதமாக கடந்த 2009ல் குடியேறியவன். கடந்த ஆண்டு, பிரெஞ்சு குடியுரிமையை பெற்றான். கடந்த மாதம் தான் துனிசியாவில் உள்ள தனது குடும்பத்தினரை சந்தித்தான். இந்த சம்பவம் தொடர்பாக, கோர்சீனின் உறவினர் உட்பட ஐந்து பேர் காவலில் வைத்து விசாரிக்கப்படுகின்றனர்’ என பிரான்ஸ் நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2014 முதல் பிரான்ஸ் முஸ்லிம் பயங்கரவாத தாக்குதல்களை சந்தித்து வருகிறது. இதன் விளைவாக 250 க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.