ஜி20 கூட்டத்திற்கு பயங்கரவாத மிரட்டல்

காஷ்மீரில் ஜி20 மாநாட்டை பாரதம் நடத்தவுள்ள சூழலில், உலக முஸ்லிம் பயங்கரவாதிகளின் தாயகமாக உள்ள பாகிஸ்தானில் இருந்து ஒரு மிரட்டல் குரல் எழுந்துள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜப்பாஸ் படை என்ற புதிய பயங்கரவாத அமைப்பு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அது, ‘ஸ்ரீநகரில் பாரதம் ஜி20 கூட்டத்தை நடத்த அனுமதிக்க மாட்டோம்’ என மிரட்டல் விடுத்துள்ளது. 1998ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் பங்கேற்ற பாகிஸ்தானிய ராணுவ வீரர் தான் இந்த ஜப்பாஸ் படைக்கு தலைமை தாங்குகிறார். இந்த புதிய பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஷெஹ்சாத் அகமது, ஜம்மு காஷ்மீரில் ஜி20 கூட்டங்களை நடத்துவதற்கு எதிராக பாரதத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். “ஜி20 மாநாட்டை ஸ்ரீநகரில் நடத்த பாரதப் பிரதமருக்கு உரிமை இல்லை. ஸ்ரீநகரில் ஜி20 கூட்டத்தை நடத்த விடமாட்டோம். எங்களுடன் ஒத்துழைப்பவர்களை நாங்கள் பாராட்டுவோம்” என்று அவர் அறிவித்தார்.அவர் காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் ஜிஹாதி அடிப்படை முகாமை கட்டமைத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.