வந்தவாசி கோட்டைத்தெருவை சேர்ந்த நசீர் பாஷா என்பவருக்கும் மஸ்தான் என்பவருக்கும் ஆட்டோ ஸ்டாண்டு தலைவர் யார், போதை பொருட்கள் விற்பனை தலைவர் யார் என்பது சம்பந்தமான பிரச்சனைகள் கடந்த ஐந்து வருடங்களாக இருந்துள்ளது. இவர்கள் இருவரும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற பயங்கரவாத ஆதரவு அமைப்பின் அரசியல் முகமான எஸ்.டி.பி.ஐ கட்சி உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், மஸ்தானுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஆதரவு உள்ளது. இவரை நசீர் பாஷா ஒருமுறை கடத்தி சென்று மிரட்டியுள்ளார். இதனால், சிறைத்தண்டனையும் பெற்று ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். அவரை பழிவாங்க, மஸ்தான் தனது நண்பர்களும் கட்சி உறுப்பினர்களுமான நூருல்லா, ஜான்பாஷா, அமீன் உள்ளிட்ட ஆறு பேருடன் இணைந்து ஓட ஓட கொடூரமாக அவரது உடலில் 28 இடங்களில் வெட்டிக் கொன்றுள்ளான். இது திட்டமிட்டே நடந்த படுகொலை. காவல்துறை இதில் மெத்தனமாக நடந்துக்கொள்கிறது. ஊர் மக்கள் பயத்தில் உள்ளனர். நார்கோ டெரரிசம் எனப்படும் போதைப்பொருள் பயங்கரவாதம் சம்பந்தமாக நடந்த இந்த கொலையை பயங்கரவாத நடவடிக்கையாகக் கருதி தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.