கோயில் சொத்துகள் அரசு தகவல்

ஹிந்து அறநிலையத்துறை இணையதளத்தையும், முக்கிய கோயில்களின் இணையதளங்களையும் முறையாக பராமரிக்க வேண்டும், கோயில்கள் குறித்த அனைத்து தகவல்களையும் இணையதளங்களில் வழங்க வேண்டும் என கோரி, ஆலய வழிபடுவோர் சங்கத்தின் செயலாளர் ராதாராஜன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு பதில் மனு தாக்கல் செய்த ஹிந்து அறநிலையத்துறை தனது அறிக்கையில், கோயில் சொத்துக்களை அடையாளம் காண அமைக்கப்பட்ட குழுவின் பணி நடந்து கொண்டுள்லது. கொரோனா தொற்று காரணமாக, இப்பணி காலதாமதமாகிறது. தொற்றுப் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர், ‘சர்வேயர்’ பற்றாக்குறை நிலவுகிறது, இதனால் பணிகளை முடிக்க நேரமாகிறது. எனவே, கோயில் சொத்துக்களை அடையாளம் காண, அளவிட ஜி.பி.எஸ், டிரோன் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளோம்’ என தெரிவித்துள்ளது.