பஞ்சாப்பில் கோயில் அவமதிப்பு

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள அஜ்னாலா நகரில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயண் கோயிலில் சில மர்ம நபர்கள் இரவில் புகுந்து சாமி சிலைகள் மற்றும் கோயில் வளாகங்கள் சேதப்படுத்தியும் அசுத்தப்படுத்தியும் சென்றுள்ளனர். மேலும், தங்கம், செயற்கை நகைகள், மோட்டார் சைக்கிள், ஒரு லட்சம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றனர். கோயிலில் 15 ஆண்டுகளாக தங்கியிருக்கும் சுவாமி சத்ய ஆகாஷ், இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தார். எனினும் காவல்துறை இதனை திருட்டு வழக்காகவே பதிவு செய்துள்ளது. கோயில் சாமி சிலைகள் அவமதிப்பு என வழக்குப் பதிவு செய்ய மறுத்துவிட்டது. இதுகுறித்து விசாரிக்க புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த காவல்துறை குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என தெரிவித்துள்ளது.