டெலிகாம் பி.எல்.ஐ திட்டம்

உள்நாட்டில் தயாரிப்பை ஊக்கப்படுத்தும் வகையில், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கச்சலுகை திட்டமான (பி.எல்.ஐ) திட்டத்தை அலைபேசி பொருட்களின் உற்பத்திக்கும் மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதன்படி, அடுத்த நான்கரை ஆண்டுகளில் ரூ. 3,345 கோடி முதலீட்டை உள்ளடக்கிய 31 திட்டங்களுக்கு தொலைத்தொடர்பு துறை ஒப்புதல் அளித்துள்ளது. இது ஒரு வினையூக்கியாக தொழில்துறையினருக்கு உதவும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் தேவுசின் சவுகான் கூறினார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 12,195 கோடி இதற்கு செலவாகும். இத்திட்டம், ரூ. 2.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள உபகரணங்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும். சுமார் 40,000 பேருக்கு நேரடி, மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்கும். இது குறித்து கருத்துத் தெரிவித்த கோரல் டெலிகாம் நிறுவன இயக்குனர் ராஜேஷ் துலி,  சிறுதொழில் முனைவோரை உள்ளடக்கிய பி.எல்.ஐ திட்டங்களில் இது முதன்மையானது. இதனை அரசு அறிவித்து தக்க சமயத்தில் எங்களுக்கு உதவி செய்தது என கூறினார்.