உஸ்பெகிஸ்தான் நாட்டிற்குச் சென்ற மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி, தாஷ்கண்டில் உள்ள பாரதத்தின் இரண்டாவது பிரதமர் மறைந்த லால் பகதூர் சாஸ்திரியின் நினைவுச் சின்னத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். உஸ்பெகிஸ்தானின் கலாச்சார அமைச்சர் ஓசோட்பெக் நசர்பேகோவை சந்தித்து தொல்பொருள் பாதுகாப்புத் துறையில் உஸ்பெகிஸ்தான் நிபுணர்களுடன் பாரம்பரிய திட்டங்கள், கலாச்சார பரிமாற்றங்கள், திரைப்படங்கள், திறன் மேம்பாடு போன்றவற்றில் ஒத்துழைப்பு குறித்து பேசினார். பின்னர், அங்குள்ள தாஷ்கண்ட் சட்டப் பல்கலைக் கழகம் உட்பட பல கல்லூரிகளுக்கு உஸ்பெக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் 1,000 பிரதிகளை பாரதம் சார்பாக வழங்கினார்.