திராவிடக் கட்சிகளிடம் தமிழ் படும்பாடு

தமிழ், தமிழர்கள், தமிழர்களுக்கு மட்டுமே அரசு அலுவலகங்களில் வேலை, தமிழ் எங்கள் உயிர் மூச்சு என மூச்சுக்கு முன்னூறு தடவை பேசும் பலரும் அதனை தங்கள் வாழ்க்கையில் கடைபிடிப்பதில்லை என்பதை உலகறியும். தமிழை வைத்து பிழைக்கும்  திராவிட கட்சிகளில், தமிழே தெரியாத, அதனை சரியாக உச்சரிக்கூடத் தெரியாத பலர் உள்ளனர். சமீபத்தில், கஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செங்காடுப் பகுதி ஊராட்சித் தலைவராக தெர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.கவை சேர்ந்த ஒரு பெண் தெலுங்கு பேசுபவர். அவருக்கு தமிழ் எழுதப் படிக்கக்கூட தெரியாது. அவர், முதல்வர் ஸ்டாலின் முன்பாக கிராமசபை கூட்டத்தில் பேசுகையில், தான் பேசவந்த தமிழ் வார்த்தைகளை தெலுங்கில் எழுதிவைத்துக்கொண்டு அதை தப்பும் தவறுமாக படித்தார். பிறகு, அந்த துண்டுசீட்டை வாங்கிப் பார்த்த ஸ்டாலின், அவர் தெலுங்கில் எழுதி வைத்து படித்ததை சிலாகித்து அனைவரையும் கைத்தட்டும்படி கூறினார். ஸ்டாலினும் அதேபோல ஒரு துண்டு சீட்டை தனது கைகளிலும் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.