வாய்ப்பை தவறவிட்ட தமிழகம்

தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை கொண்டுவரும் சில முக்கிய நிறுவனத் தலைவர்கள், முதலீட்டாளர்களைச் சந்திப்பதாக்கூறி தமிழக முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்றுள்ளார். ஆனால், அவர் இங்கு ஒரு முக்கிய முதலீட்டை ஈர்க்கத் தவறிவிட்டார். செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு மற்றும் வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக இருக்கும் குவால்காம் நிறுவனம், அமெரிக்காவை அடுத்து உலகிலேயே மிகப்பெரிய அலுவலகத்தை பாரதத்தில் அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக அந்நிறுவனம், சென்னை ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களை முதற்கட்டமாக தேர்வு செய்தது. அந்நிறுவனத்தை தமிழகம் கொண்டுவர தமிழக அரசு முயற்சிக்காத நிலையில், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அந்த வாய்ப்பை தட்டிச் சென்றுள்ளது. தெலங்கானா தொழில்துறை அமைச்சர் கே.டி. ராமராவ் தனது அமெரிக்கச் சுற்றுப் பயணத்தின்போது குவால்காம் உயர் அதிகாரிகளை அங்கேயே சந்தித்து இந்த முதலீட்டை பெற்றுள்ளார். இந்த திட்டத்திற்காக குவால்கம் நிறுவனம் சுமார் 3,904.55 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது. இதன் மூலம் புதிதாக 8,700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும் குவால்காம் தெலுங்கானாவில் விவசாயம், ஸ்மார்ட் சிட்டி, டிஜிட்டல் கல்வி உள்ளிட்ட திட்டங்களில் பணியாற்றவும் திட்டமிட்டுள்ளது.