கடந்த நிதியாண்டின் முடிவில், பாரதத்தில் எந்தெந்த மாநிலங்கள் எவ்வளவு கடன் வாங்கியுள்ளது என்று ஆய்வறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது. இந்த அறிக்கையின் படி கடந்த நிதியாண்டின் முடிவில் தமிழக அரசு மொத்த சந்தைக் கடனாக (Gross Market Borrowings) சுமார் 87,000 கோடி ரூபாயை வாங்கியுள்ளது. இதன் மூலம் பாரதத்திலேயே அதிக கடன் பெற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா 72,000 கோடி ரூபாயுடன் 2வது இடத்திலும், மேற்கு வங்கம் 63,000 கோடி ரூபாயுடன் 3ம் இடத்திலும் உள்ளது. மேலும், ஆந்திரப் பிரதேசம் 57,478 கோடி ரூபாய் கடனுடன் 4ம் இடத்திலும், உத்திரப் பிரதேசம் 55,612 கோடி ரூபாய் கடனுடன் 5வது இடத்தையும் பிடித்துள்ளது. தமிழக அரசு வாங்கிய கடனில், சில பகுதி கடன்களை திரும்பி செலுத்தவும், வட்டியை செலுத்தவும் அளிக்கப்பட்டுள்ளது. பெரும் பகுதி மூலதன விரிவாக்கத்திற்கு செலவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.