மன்னிப்பு கோரிய சூரி

திராவிட அரசியல்வாதிகளை போலவே, அவர்கள் கைப்பிடியில் உள்ள திரைத்துறையை சேர்ந்தவர்களும் ஹிந்துக்கள், ஹிந்துக்களின் பண்பாடு, கலாச்சாரம், ஹிந்து கோயில்களை மட்டுமே திரைப்படங்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் திட்டமிட்ட வகையில் சிறுமைபடுத்தி வருகின்றனர். அவ்வகையில், மதுரையில் நடந்த விருமன் படத்தின் ஆடியோ மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய காமெடி நடிகர் பரோட்டா சூரி, “ஆயிரம் கோயில்கள் கட்டுவதைவிட, ஆயிரம் அன்னச்சத்திரம் கட்டுவதைவிட ஒரு மாணவரை படிக்க வைப்பது பல நூறு ஆண்டுகள் பேசும். அதை மிகச் சிறப்பாக செயல்படுத்தி வரும் சூர்யாவுக்கு நன்றிகள்” என்று கூறியிருந்தார். அவருடைய இந்த கருத்து, ஹிந்துக்களிடையே கோபத்தையும் சர்ச்சையையும் உருவாக்கியது. பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து சூரி, “நான் தெய்வ பக்தி நிறைந்தவன். மதுரை மீனாட்சி மீது மிகுந்த பக்தி கொண்டவன், என் கடைகளில் அம்மனின் படம்தான் வைத்துள்ளேன். நான் படிக்காதவன், என் பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டது” என மன்னிப்பு கோரியுள்ளார். ஹிந்துக்களின் ஒற்றுமையின் வலிமைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இதனை அவர்கள் உணர்கிறார்களோ இல்லையோ ஹிந்துக்கள் நிச்சயம் உணர வேண்டும், ஒன்றிணைய வேண்டும் என்பதே ஹிந்துக்களின் உரிமைகளுக்காக போராடுபவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.