சில அடிப்படைவாத முஸ்லிம் அமைப்புகளின் சதி ஆலோசனையால், ஹிஜாப் அணிந்துதான் பள்ளி கல்லூரிக்கு வருவோம் என சில காலமாக திட்டமிட்ட ரீதியில் போராடினர் சில முஸ்லிம் மாணவிகள். அரசு, நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி இந்த விவகாரத்தில் கலவரம் ஏற்படுத்த தொடர் முயற்சிகள் மேற்கொண்டனர். இந்நிலையில், தெற்கு கர்நாடக மாவட்டத்தில் உப்பினங்கடியில் உள்ள அரசு கல்லூரியில் இந்த பிரச்சனையை ஏற்படுத்தியதால் இடைநீக்கம் செய்யப்பட்ட 7 மாணவிகள் மன்னிப்புக் கடிதம் சமர்ப்பித்துள்ளனர். மேலும், ஹிஜாப் இன்றி வழக்கமான சீருடையில் வகுப்புகளுக்குச் செல்லத் துவங்கியுள்ளனர். முன்னதாக, இது குறித்து மாணவிகளின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 101 பேரில் நாற்பத்தைந்து மாணவிகள் மீண்டும் வகுப்புகளுக்கு திரும்பச் செல்லத் துவங்கியுள்ளனர்.