டெல்லியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அனுமான் ஜெயந்தி ஊர்வலத்தில், முஸ்லிம்கள் திட்டமிட்டு நிகழ்த்திய கொடூர வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில், சோனு, தில்ஷாத், அன்சார், சலீம், இமாம் ஷேக் ஆகிய 5 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்முறை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்துறை காவல் பிரிவு விசாரித்து வருகிறது. இதற்காக 14 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் எந்தப் பிரிவு, எந்த மதமாக இருந்தாலும் எந்த விதமான பாரபட்சமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். வதந்திகள் பரப்பி அமைதியை சீர்குலைப்பதைத் தடுக்க சமூக வலைத்தளங்களையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்று டெல்லி காவல் ஆணையர் ராகேஷ் அஸ்தானா கூறியுள்ளார்.