ஹிந்துக்கள் கொண்டாடும் கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி போன்ற விழாக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கமுடியாத ஸ்டாலின் அதே ஹிந்து பண்டிகையான ஓணத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘இது கேரள மக்கள் மீதான அவரது பாசமோ, ஹிந்து பண்டிகை குறித்த வாழ்த்தோ அல்ல, தமிழகத்தில் ஒற்றுமையாக வாழும் அவர்களின் வாக்கு வங்கியை குறிவைத்து நடத்தப்படும் திராவிட மாடல் அரசியல் மட்டுமே. ‘நல்லரசு புரியும் வேந்தனை வஞ்சகத்தால் வீழ்த்தினாலும், வரலாற்றிலும் மக்கள் மனங்களிலும் அவன் புகழ் என்றும் மறையாது என்பதை இன்றளவும் எடுத்துக்காட்டும் நாள் ஓணம் திருநாள்’ என ஸ்டாலின் கூறியுள்ளார். இது ஹிந்து புராணங்கள், இதிகாசங்கள், அவற்றின் தத்துவம், மஹாபலியின் கதை, அதன் பின்னணி குறித்த அவரது புரிதல் அவ்வளவுதான் என்பதையே எடுத்துக்காட்டுகிறது. மேலும், முந்தைய தி.மு.கவின் ஆட்சி கலைப்புகளின் பின்னணியின் தாக்கமும், மீண்டும் அப்படி தங்களது ஆட்சி கலைக்கப்படுமோ என்ற பயத்தையும் வெளிப்படுத்துவதாகவே உள்ளது. ‘நாங்கள் நம்பாத எதற்கும் வாழ்த்து சொல்ல மாட்டோம் என தி.மு.க எம்.பி. ராஜா கூறினார். ஆனால், ஓணம் என்பது மகாவிஷ்ணு மகாபலி சக்கரவர்த்தியிடம் 3 அடி மண் கேட்டு நிலத்தையும் ஆகாயத்தையும் தனது காலால் அளந்த வரலாறு இதை எப்படி ஸ்டாலின் நம்புகிறார்? என மக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.