காஷ்மீரில் முன்னாள் முதல்வர்கள் அவர்களது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக 2000ல் சிறப்பு பாதுகாப்பு குழு உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில், முன்னாள் முதல்வர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. காஷ்மீர் சிரப்பு சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்குப் பிறகு கடந்த 2020ல் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டது. அதன்படி, மேற்குறிப்பிட்ட பாதுகாப்பு விதியை காஷ்மீர் அரசு தவி்ர்த்தது. சிறப்பு பாதுகாப்பு குழுவை கலைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், பரூக் அப்துல்லா, குலாம் நபி ஆசாத், ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகிய 4 முன்னாள் முதல்வர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பு விரைவில் விலக்கிகொள்ளப்படும் என தெரிகிறது. காஷ்மீரில் முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதை மேற்பார்வையிடும் பாதுகாப்பு ஆய்வு ஒருங்கிணைப்புக் குழுவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.