மேற்குவங்க மாநிலம், மால்டாவில் உள்ள கலியாசக் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் அதிகாரி, ஹிந்துக்களை வலுக்கட்டாயமாக முஸ்லிம்மாக மதமாற்றம் செய்ய முயன்றதாகவும், மதம் மாறாததால் தங்கள் கணவர்களை கைது செய்து சிரையில் வைத்ததாகவும் அப்பகுதியை சேஎர்ந்த பெண்கள் போராட்டம் நடத்தினர். உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டி போராட்டம் நடத்தினர். திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான அரசு இதி நடவடிக்கை எடுக்கத் தவறினால் போராட்டம் நடத்தப் போவதாக மேற்கு வங்க பா.ஜ.க எச்சரித்தது. இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், கலியாசக் கட்டாய மதமாற்ற வழக்கை சி.பி.ஐ மற்றும் என்.ஐ.ஏ ஆகிய இரண்டு புலனாய்வு அமைப்புகளும் இணைந்து விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க உத்தரவுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. விஷ்வ ஹிந்து பரிஷத்தின் கிழக்கு மண்டல செயலாளர் ஸ்ரீ அமியா குமார் சர்க்கார், ‘அப்பாவி ஹிந்துக்களை சட்டவிரோதமாக மதமாற்றம் செய்வதை தடுக்கவும், ஜிஹாதி காட்டுமிராண்டித்தனத்தை தடுக்கவும் வலுவான மதமாற்ற எதிர்ப்பு சட்டத்தை அரசு வகுக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், மாநிலத்தில் வெகுஜன இயக்கத்தைத் தொடங்குவதற்குத் தேவையான நடவடிக்கையை வி.ஹெச்.பி மேற்கொள்ளும். இவ்வழக்கின் மூலம், முஸ்லிம் ஜிஹாதிகளும் உள்ளூர் காவல்துறையும் திருணமூல் காங்கிரஸ் குண்டர்களுடன் எவ்வாறு இணைந்து செயல்படுகிறார்கள் என்பதும் தெளிவாகிறது’ என தெரிவித்தார்.