கொரோனா அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதனைக் கட்டுப்படுத்த, வரும் மே 21வரை ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப்பிரிவு 144ன் படி, தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மத வழிபாட்டுத்தலங்கள் உட்பட எங்கும் கூட்டம் கூடுவது சட்டவிரோதமானது. இந்த சூழலில், கடந்த ஏப்ரல் 21ல் ராஜஸ்தானின் உள்ள சங்கனேரில் ரம்ஜானையொட்டி, ஜாமா மஸ்ஜிதுக்கு வெளியே பெரிய கூட்டம் திரண்டிருந்தது. அவர்களை கலைந்துபோக சொல்லி காவல்துறை கோரிக்கை விடுத்தும் அவர்கள் செவி சாய்க்கவில்லை. பின்னர் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சித்தனர். இதனால் ஆத்திரம் கொண்ட அந்த கும்பல், காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் பல காவலர்கள் காயமடைந்தனர். பல வாகனங்களும் சேதமடைந்தன. நிலைமையைக் கட்டுப்படுத்த டி.ஜி.பி அபிஜித் சிங் சம்பவ இடத்திற்கு விரைந்தார். மசூதியில் இருந்துகொண்டு கல் வீச்சில் ஈடுபட்ட சமூக விரோத சக்திகளை அடையாளம் கண்டு கைது செய்ய காவல்துறை முயற்சி எடுத்து வருகிறது.