செங்கல்பட்டு மாவட்டம் சிறுதாமூர் கிராமத்தை (சென்னையிலிருந்து 110 கிமீ. திண்டிவனத்திற்குமுன் ஒலக்கூர் நெடுஞ்சாலையின் மேற்கே) வளர்ந்த கிராமமாக (Smart Village) உயர்த்த ஊர் மக்களின் ஒருங்கிணைப்புடன் உழைத்து வருகின்றோம்.
இந்நாள்வரை கொரோனா தொற்று இல்லாத கிராமம். எங்களின் பணிகளில் ஒன்றாக சில மாதங்களுக்கு முன் துவங்கிய சிறிய அரசு மருத்துவமனை மருத்துவர், ஊழியர்களின் உதவியுடன் மக்களைச் சமூக இடைவெளியுடன் சந்தித்து நோயின் தீவிரத்தை எடுத்துச் சொல்லி ஆறு முறை மொத்தம் 5000க்கும் மேற்பட்ட முகக்
கவசங்களை வழங்கியதோடு அருகிலுள்ள நகருக்கு அனைவரும் செல்லாத வண்ணம் ஒவ்வொரு வீடுகளுக்கும் வேண்டியவற்றை ஒருசிலர் மட்டுமே, குறிப்பாக இளைஞர்கள் சென்று வாங்கி வந்து வழங்கும் முறை தொடர்கின்றது. இதனால் மக்களின் வெளியூர் நடமாட்டம் குறைந்தது.
குறிப்பிட்ட நாட்களில் அத்தியாவசியப் பொருட்களை ஊருக்கே வந்து சமூக இடைவெளியுடன் விற்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. சளி, இருமல், இளஞ்காய்ச்சல் ஆகியவற்றுக்கு எளிய இயற்கைமுறையாக கிராமத்தில் கிடைக்கும் குப்பைமேனி இலை, ஆடாதொடை இலை போன்றவற்றைக் கஷாயமாக அருந்தும் பழக்கம் செயல்படுத்தப்படுகின்றது இவற்றை வீட்டுக்குப் பின்பலத்தில் வளர்க்க வைக்கின்றோம். வெளியூர் மக்கள் வந்தால் முகக்கவசமின்றி அனுமதிக்காதீர் என்று அறிவுறுத்திக் கண்காணிக்க வைக்கின்றோம்.
பத்து கி.மீ. வளையத்துக்குள் கொரோனா கிருமிகள் நுழைய வாய்ப்பில்லாமல் செய்ய மக்களே அரண். ஒவ்வொரு கிராமமும், நகரப் பகுதியும் (நகரத்தில் அமைப்புகள் – குடியிருப்பு சங்கங்கள்) தாமே இத்தகையத் திட்டங்களைச் செயலாக்குவோம். முன்முயற்சி நமதே. முழு முயற்சியும் நமதே. நம்மால் முடியும்.
சிறுதாமூரில் இருந்து தாம்பரம் சென்று வர பேருந்து வசதி உண்டு, கிராமத்தில் வங்கிக் கிளை உண்டு,சாலைகள் மூன்று புறங்களிலும் உண்டு, மருத்துவமனை உண்டு, புனரமைக்கப்பட்ட ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த பெருமாள் கோயில் உண்டு, மூன்று ஆண்டுகளாக ஊரின் மத்தியில் தினமும் பறக்கும் தேசியக்கொடி உண்டு. தினமும் காலையில் தமிழ்த்தாய் வாழ்த்து தேசியகீதமும் ஒலித்து தேச மண்ணுக்கு மரியாதை செய்யும் மரபு உண்டு.
செய்யத் துவங்கவுள்ள பணிகள்
பள்ளிக்கூடத்தைத் தரமுயர்த்துவது..
பணி வாய்ப்புகள் உருவாக்குவது…
ஒருங்கிணைந்த ஆடு வளர்ப்பு, வீட்டுத்
தோட்ட சிறுபண்ணைத் திட்டம்….
எங்களுடன் சமுதாயப் பணிகளில் இணை
யுங்கள். உங்களின் கிராமத்தையும் உயர்த்துவோம்.
தொடர்புக்கு : 960064446
கட்டுரையாளர் :
ஊடகவியலாளர், வங்கியாளர்