சஞ்சீவனி சாரதா கேந்திரா

கஷ்மீரின் போஹ்ரி ஆனந்த நகரில் உள்ள சஞ்சீவனி சாரதா கேந்திரா வளாகத்தில், சாரதா அஷ்டமி தினத்தையொட்டி ‘சஞ்சீவனி சாரதா கேந்திரா’வின் நிறுவன தின விழா நடைபெற்றது. காஷ்மீர் ஹிந்துக்களின் தியாகிகள் தினமும் அதில் அனுசரிக்கப்பட்டது. இதில், சாரதா லிபி கற்றல் படிப்பை ஊக்குவிக்க ஹரியானாவின் விஸ்வகர்மா திறன் பல்கலைக்கழகம் மற்றும் சஞ்சீவனி சாரதா கேந்திரா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. விஸ்வகர்மா திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ராஜ் நேரு இந்நிகழ்வில் தலைமையேற்று பேசுகையில், ‘காஷ்மீர் நாகரிகம், புதுமை, அறிவியல், தொழில்நுட்பத்தின் தொட்டில், ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க இளைய தலைமுறையினரிடையே உண்மையான, உயர் சிந்தனை, தார்மீக கல்வி, புதிய சிந்தனை செயல்முறைகளை வளர்ப்பதே காலத்தின் தேவை’ என்று கூறினார். இந்நிகழ்வில், சாரதா லிபி படிப்பை முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. காஷ்மீர ஹிந்து இளைஞர்களை தாய்நாடு மற்றும் சமூகத்திற்காக தங்கள் பங்களிப்பை அளித்து சேவை செய்ய ‘காஷ்யப் பூமியின் சேவைக்காக இளைஞர்கள்’ என்ற இயக்கம் தொடங்கப்பட்டது. பல்வேறு போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.