தேசிய தொலை மருத்துவ சேவை என அழைக்கப்படும் ‘இ-சஞ்சீவனி’ திட்டத்தை, கடந்த 2019ல் கொரோனா காலத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் அறிமுகம் செய்தது. இதில் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை, மருத்துவர்கள் இணைய வழியில் இலவசமாக வழங்கி வருகின்றனர். தினமும் சராசரியாக 35 ஆயிரம் பேர் இதில் மருத்துவ ஆலோசனைகளை பெற்று வருகின்றனர். இவற்றின் மூலம் இதுவரை 21 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இ-சஞ்சீவனி திட்டத்தில் இதுவரை 30 லட்சம் பேருக்கும் அதிகமாக ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதிக ஆலோசனை பெறும் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்திலும் அடுத்ததாக, உத்தரபிரதேசம், கர்நாடகாவும் திகழ்கின்றன.