ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) அமைப்பின் சார்பாக, வீர சிவாஜியின் 350வது முடிசூடிய விழா, அம்பேத்கர் பிறந்தநாள் விழா, வள்ளலாரின் 200வது ஜெயந்தி விழா ஆகியவற்றை முன்னிட்டு நேற்று தமிழகம் முழுவதும் 45 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலமும் அதைத் தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இந்த அணிவகுப்பு ஊர்வலம் நடத்த விதிக்கப்பட்ட பல்வேறு தடைகளைக் கடந்து, இறுதியாக உச்ச நீதிமன்றம் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த தடையில்லை என தீர்ப்பளித்தது.தீர்ப்பிற்கு பிறகு உடனடியாக அணிவகுப்பு ஊர்வலத்துக்கான தேதி முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.இடைபட்ட மூன்றே நாட்களில் அறிவிக்கப்பட்ட 45 இடங்களிலும் மிக வேகமாக அதற்கான ஏற்பாடுகள் செய்ய்யப்பட்டன.எதிர்பார்த்ததைவிட அதிகமான அளவில் ஸ்வயம்சேவகர்கள் கலந்துக் கொண்டு இந்த அணிவகுப்பு ஊர்வலத்தை வழக்கம்போல அமைதியாகவும் மிக சிறப்பாக நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதில் சில பதிவுகள்:
சமுதாய நல்லிணக்க விருதுகள் விழா
டாக்டர்ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி சார்பாக அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா மற்றும் சமுதாய நல்லிணக்க விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நேற்று (16.4.2023) நடைபெற்றது. இதில் ஆதிமூவர் சமூகச் செயல்பாட்டு மையம் ஒருங்கிணைப்பாளர் ஏ.பி.அன்புச்செல்வம் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தென் பாரதத் தலைவர் இரா.வன்னியராஜன், அறக்கட்டளைத் தலைவர் எம்.கே.ஆர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.தேசிய சிந்தனைக் கழகத்தின் தென்பாரத அமைப்பாளர் சு.விசுவநாதன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.நிகழ்ச்சியில், பட்டியல் சமுதாயத்துக்காக சேவையாற்றி வரும் நால்வருக்கு சமுதாய நல்லிணக்க விருது வழங்கப்பட்டது.சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இயற்பியத்துறை பேராசிரியர் முனைவர் என்.சிவானந்தம், செம்மஞ்சேரி சுனாமி நகரில் சேவை ஆற்றி வரும் ஏ. முனிரத்தினம், மதுரவாயல் தமிழ் வீர கலைப் பயிலகம் நடத்தி வரும் இரா.சௌந்தர்ராஜன் மற்றும் அண்ணல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பொது நல சங்கம் ஒருங்கிணைப்பாளர் பாலையா உள்ளிட்டோருக்கு சமுதாய நல்லிணக்க விருதுகள் வழங்கப்பட்டன.