தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அணிவகுப்பு, பேரணி போன்ற விவகாரத்தில் முடிவெடுக்கக்கூடிய அதிகாரம் மாநில அரசுக்குத்தான் உள்ளது. நிலைமையை கருத்தில் கொண்டு மைதானம் உள்ளிட்ட இடங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதி தரப்பட்டது. அதற்கு முழுமையாக தடை விதிக்கவில்லை. பிரச்சனை உள்ள இடங்களில் தான் அனுமதி மறுக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசின் கடமை. அதில் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் அரசு தெளிவாக உள்ளது” என கூறினார். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை மார்ச் 17ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.