ரோஹிங்கியாக்கள் கைது

அண்மையில் உத்தரபிரதேசத்தில் நான்கு ரோஹிங்கியாக்களை அம்மாநில காவல்துறையின் பயங்கரவாத தடுப்புப் படை கைது செய்துள்ளது. இவர்களுடன் சேர்த்து சமீப காலத்தில் அங்கு கைது செய்யப்பட்ட ரோஹிங்கியாக்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. மீரட்டில் வசிக்கும் ஹபீஸ் ஷபிக் என்பவன் தலைமையில், முகமது இஸ்மாயில், அஜீசுல் ரஹ்மான், ஷாமியுல்லா, மற்றும் முஃபிசுரேஹ்மான் ஆகிய நான்கு பேர் கொண்ட ரோஹிங்கியா கும்பல், உத்தர பிரதேசத்தில் அதிகமான ரோஹிங்கியாக்களின் குடியேற்றத்திற்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர். அவர்களுக்காக ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை என பல போலி ஆவணங்களை சில அரசியல்வாதிகள், அதிகாரிகளின் துணையுடன் ஏற்பாடு செய்துள்ளனர். அவர்கள் சில ரோஹிங்கியா பெண்களையும் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளனர் என்பதும் விசாரனையில் தெரிய வந்துள்ளது.