ஒரு காலத்தில் ஹராகல்-யாகின் என்று அழைக்கப்பட்ட அரக்கன் ரோஹிங்கியா சால்வேஷன் ஆர்மி அல்லது ஏ.ஆர்.எஸ்.ஏ தற்போது மீண்டும் பெரிய அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது. இது சர்வதேச பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதில் தற்போது, வங்கதேசத்தில் உள்ள 150 க்கும் மேற்பட்ட பெண் பயங்கரவாதிகள் உட்பட 2,000 க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் காக்ஸ் பஜார், டெக்னாஃப் மாவட்டத்தில் உள்ள குதுபலோங், பலுகாலி பகுதிகளில் உள்ளனர். இவர்கள், போதை மருந்து கடத்தல், ஆயுதங்கள் கடத்தல், ஆட்கடத்தல், விபச்சார விடுதிகளுக்கு பெண்களை கடத்துதல், மிரட்டி பனம் வாங்குதல் என பல்வேறு சட்ட விரோத செயல்பாடுகளை உலகம் முழுவதும் ஆரம்பித்துள்ளனர். தாவூத் இப்ராஹிம்மின் டி – கம்பெனி, ஹமாஸ், ஹிஸ்புல்லா உள்ளிட்ட பல பயங்கரவாத அமைப்புகளுடன் சேர்ந்து பணியாற்றுகின்றனர். ஹமாஸ் தற்போது இந்த அமைப்பை சேர்ந்த 25 பெண்களுக்கு ஆயுதப் பயிற்சி, மனித வெடிகுண்டு செயல்பாடுகளுக்கு பயிற்சி அளித்து வருகிறது என, வங்கதேசத்தில் இருந்து வெளியாகும் ‘டாக்கா போஸ்ட்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.