உத்தரப்பிரதேச அரசு, கடந்த இரு தினங்களுக்கு முன் தலைநகர் லக்னோவில் குளிரூட்டப்பட்ட 40 மின்சாரப் பேருந்துகளை அறிமுகப்படுத்தியது. அப்போது பேசிய உ.பி. அமைச்சர் அசுதோஷ் டாண்டன், ‘கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கும் மாசு இல்லாத சூழலை வழங்குவதற்கும் இந்த நடவடிக்கை நோக்கமாக உள்ளது. வரும் நாட்களில் மேலும் பல மின்சார பேருந்துகள் இந்த சேவையில் இணைக்கப்படும்’ என தெரிவித்தார். இந்நிலையில், பாரதத்தில் முழுவதும் குளிரூட்டப்பட்ட ரயில் நிலையம் பெங்களூருவில் விரைவில் செயல்பாட்டுக்கு வரும். 45 ஆயிரம் சதுர அடிப் பரப்பில் 7 ரயில் நிலையங்களுடன், 50 ஆயிரம் பேர் நடமாடும் வசதியுடன் இது அமையவுள்ளது என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.