சமீபத்தில் விவசாய போராட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த பிரபல பாப் பாடகி ரிஹானா, அதற்காக காலிஸ்தான் பயங்கரவாதிகளிடம் இருந்து சுமார் 18 கோடி பணம் பெற்றுள்ளார் என்ற செய்தி வந்துள்ளது. மேலும், அவர் நடத்தும் அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ஃபென்டி பியூட்டி நிறுவனம், குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக எடுக்கப்படும் மைகாவை பயன்படுத்துகிறது என்ர குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்படி பயன்படுத்தப்படும் மைகா ‘ரத்த மைகா’ என்றழைக்கப்படுகிறது. எனவே இதை பயன்படுத்தி அழகு சாதன பொருட்கள் தயாரித்து அதில் பார்க்கும் லாபம் ரத்தப் பணமாகவே உலக மக்களால் பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.