கோயிலுக்கு மட்டும் கட்டுப்பாடா?

திருநெல்வேலி மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழாவில், கோயிலில் சப்பரம் வீதி உலா நடைபெறும். கடந்த 2020ல்கூட உயர்நீதிமன்ற அனுமதியுடன் சாலியர் தெருவில் சப்பர ஊர்வலம் நடந்தது. ஆனால், தற்போது தி.மு.க தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள நிலையில், நவராத்திரி காலமான தற்போது கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி அக்டோபர் 15ல் சப்பர ஊர்வலம் நடத்த அனுமதி கோரி திருநெல்வேலி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இக்கோரிக்கை மீது ஆட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து, அனுமதி வழங்கக்கோரி நெல்லையை சேர்ந்த லட்சுமணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, கடைகள், மால்கள், திரை அரங்குகள் செயல்பட அனுமதிக்க பட்டுள்ளது. கோயில்களுக்கு மட்டும் கட்டுப்பாடு ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும், அரசுத் மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறினார்.