கிரானைட் குவாரிகளுக்கு எதிர்ப்பு

கரூர் மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து வெள்ளியணை பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில், கரூர் மாவட்டம் கே.பிச்சம்பட்டி பகுதியில் இரண்டு கிரானைட் குவாரிகளை அமைக்க பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தியது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அப்பகுதி பொதுமக்கள், கல் குவாரி அமைக்க கூடாது என வலியுறுத்தினர். மேலும், பொதுமக்கள் கலந்து கொள்ளக்கூடாது என திட்டமிட்டே 10 கிலோமீட்டர் தள்ளி கூட்டத்தை நடத்துவது, கூட்டத்தில் கல்குவாரி உரிமையாளர்கள், அவர்களின் ஊழியர்கள், தி.மு.கவினரை வேண்டுமென்றே பங்கேற்கவைப்பது குறித்து வாக்குவாதம் செய்தனர். சம்பந்தமே இல்லாமல் தி.மு.கவினர் இதில் குறுக்கிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியரும் அலுவலகத்தில் வேலை உள்ளது எனக்கூறி, பாதியிலேயே சென்றுவிட்டார். கல்குவாரிக்கு எதிராக சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.