சில மாதங்களுக்கு முன் டி.என்.பி,.எஸ்.சி குரூப் தேர்வில் ராமநாதபுரம், கீழக்கரை பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களில் பெரும் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் பரிட்சை எழுதியவர்களில் 39 பேர் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு அவர்களின் தகுதி பரிசோதிக்கப்பட்டது. இதில் தமிழ் ஆங்கிலம் என இரண்டுமே தெரியாமல், சொல்லப்போனால் அடிப்படை மனுகூட எழுதத் தெரியாமல் பலர் இருந்தது தெரியவந்துள்ளது. பணம், மதம், அரசியல் செல்வாக்கு போன்றவை இதில் பெருமளவு விளையாடியுள்ளதையே இந்த சம்பவம் சுட்டிக்காட்டுகிறது.