அமெரிக்காவில் உள்ள 131 ஆண்டுகள் பழமையானதும், உலகப் புகழ்பெற்றதுமான இலினொய் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தலைவராக பொறுப்பேற்கும் முதல் இந்தியராகிறார் தமிழகத்தை சேர்ந்த ராஜகோபால் ஈச்சம்பாடி. ராஜகோபால் ஈச்சம்பாடி திருவாரூரில் பிறந்து, சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பையும், அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகக் கல்லூரியான கிண்டி பொறியியல் கல்லூரியில் மேல்படிப்பையும் பயின்றவர். வரும் ஆகஸ்ட் 16ல் இவர் இலினொய் தொழில்நுட்ப பல்கலைக்கழக தலைவராக பொறுப்பேற்க உள்ளார். தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியில் அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.