கடந்த காலங்களில் ஆர்.எஸ்.எஸ், அதன் துணை அமைப்புகள் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராகுல் அதனை நிரூபிக்கவில்லை. மேலும் அவை பொய்யான குற்றசாட்டுகள் என நிரூபிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், அமெரிக்கா, கார்ன்வெல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கௌஷிக் பாசுவுடன் ஒரு மெய்நிகர் உரையாடலின் போது, “சமத்துவத்தின் மீதான தாக்குதலை ஆர்.எஸ்.எஸ் தங்கள் பள்ளிகளிலிருந்து இருந்து தொடங்குகிறது. பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் தங்கள் மதரஸாக்களைப் பயன்படுத்துவதைப் போலவே, ஆர்.எஸ்.எஸ் தங்கள் பள்ளிகளைப் பயன்படுத்துகிறது.” என பொய்யான தகவலை கூறியுள்ளார் ராகுல். உண்மையில், ‘1952ல் உத்தரபிரதேசம் கோரக்பூரில் சரஸ்வதி சிசு மந்திர் என சிறிய அளவில் துவங்கப்பட்ட வித்யாபாரதி தற்போது பாரதத்தின் மிகப்பெரிய கல்வி நிறுவனமாக வளர்ந்துள்ளது. 70 குழுக்கள், 23,000 பள்ளிகளை நிர்வகிக்கின்றன. இதில் 1.35 லட்சம் ஆசிரியர்களைக் கொண்டு 37 லட்சம் மாணவ மாணவிகளுக்கு மத்திய மாநில அரசுகளின் பாடதிட்டங்களின்படி கல்வி கற்பிக்கப்படுகிறது. மதரசாக்களிய போலன்றி, வித்யா பாரதியில் ஜாதி மத பேதமின்றி பல தரப்பு மாணவர்களும் பயில்கின்றனர். தரமான கல்விக்காக உலகளவில் பாராட்டப்பட்டது வித்யாபாரதி. இது தற்போது உயர் கல்வியிலும், உலக அளவில் தனது சிறகுகளை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.’இது போன்ற எந்த உண்மையையும் அறிந்துகொள்ளாமல், ஆர்.எஸ்.எஸ்ஸின் துணை அமைப்பான வித்யா பாரதி நடத்தும் பள்ளிகளை பாகிஸ்தானின் முஸ்லிம் மதரஸாக்களுடன் ஒப்பிட்டு பேசி தன் அறிவின் மேன்மையை மீண்டும் ஒருமுறை பறைசாற்றியுள்ளார் ராகுல்.