நிலைத்தன்மையை குலைக்கும் ராகுல்

இங்கிலாந்தில் லண்டனில் நடந்த ‘ஐடியாஸ் ஃபார் இந்தியா’ மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘இந்தியாவில் வெகுஜன எழுச்சி ஏற்படப் போகிறது. நாட்டின் அரசியலை மாற்றுவதற்கு அதை பயன்படுத்திக் கொள்வது எதிர்க்கட்சிகளிடம் உள்ளது, இந்தியா மிகவும் நிலையற்றதாக இருப்பதால், இந்தியாவில் உள்நாட்டுப் போர் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இந்தியாவில் ஒரு அரசியல் புரட்சி தேவை. பா.ஜ.க நாடு முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றியுள்ளது, நாட்டையே பற்றவைக்க ஒரே ஒரு தீப்பொறி போதும்’ என பேசி பாரதத்தின் நிலைத்தன்மையை குலைத்து, ஒரு உள்நாட்டு போரை ஏற்படுத்தி அதில் குளிர் காயும் காங்கிரசின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், நாட்டில் புத்துயிர் பெற காங்கிரஸ் எவ்வாறு செயல்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த ராகுல், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் காலடித்தடத்தை காங்கிரஸ் கட்சி பின்பற்ற வேண்டும். ஆர்.எஸ்எ.ஸ் ஒரு கட்டமைப்பை வகுத்துள்ளது. காங்கிரசும் மற்ற எதிர்க்கட்சிகளும் அத்தகைய கட்டமைப்பை உருவாக்க வேண்டும். ஆனால், அது மிகவும் ஆக்ரோஷமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.